திருச்சி பொன்னி மருத்துவமனையில் எலும்பு, மூட்டு, முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ முகாம்!
திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள பொன்னி மருத்துவமனையில் எலும்பு, மூட்டு, முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ் பிரபு கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த முகாமில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ₹.1000 மதிப்புள்ள எலும்பு தேய்மானம் கண்டறியும் பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இம்மு முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Comments are closed.