திருச்சி அருகே கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து; 3 பேர் பலி; ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

- Advertisement -

திருச்சி லால்குடி அருகே மாந்துறை நகர் பகுதியை சேர்ந்த நபில், சாதிக்பாச்சா, கார்த்திகேயன், அப்துல் ரகுமான், ஏகலைவன், ஆனந்த், கணபதி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்டோர் தனது நண்பனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக இன்று காலை சைலோ காரில் புறப்பட்டு சென்று உள்ளனர். அப்போது திருச்சி லால்குடி அருகே நகர் சாலை பகுதிக்கு கார் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த விஸ்வநாதன் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

- Advertisement -

தொடர்ந்து காரில் வந்தவர்கள் எட்டு பேர் பலத்த காயமடைந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் காரில் வந்த சாதிக் பாஷா, அரவிந்த் ஆகிய இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்