திருவெறும்பூர் தொகுதியில் பத்தாள பேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பத்தாள பேட்டை மற்றும் கிளியூர் ஊராட்சி ஆகிய இரு ஊராட்சிகளில் உள்ள பத்தல பேட்டை கோட்ரப்பட்டி கீழ மங்காவனம் மேலமாங்கா வனம் பகுதிகளைசார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்டகிராம மக்கள் பயன்பெறும் வகையில் பத்தாள பேட்டை சமுதாய கூடத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது மேலும் இந்த முகாமிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்
மேலும் இந்தமுகாமில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பத்தாளபேட்டையை சேர்ந்த அந்தோணி குருஸ் ,இன்னாசி மைக்கேல், முருகையன், நாகராஜன், மற்றும் கிளியூரை சேர்ந்த தங்கவேல் ஆகியோருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நத்தம் பட்டாகளை வழங்கினார் மேலும் இதே போல் விக்னேஷ் என்பவருக்கு புஞ்சை நஞ்சை பட்டாவினையும் வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்கள் கிளவிளாங்குளத்தை சேர்ந்த சுகன்யா கிளியுரை சேர்ந்த ஷர்மிளா கோற்றப்பட்டியை சேர்ந்த லாவன்யா பத்தல பெட்டையை சேர்ந்த அந்தோணி பிரியா ஆகியோருக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கி முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளின் பணிகளையும்
அலுவளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இதனையடுத்து பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும் என அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார் மேலும் இந்த முகாமில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் செய்தியாளர்
ஜார்ஜ் விஜயகுமார்
Comments are closed.