மக்களுக்கான திட்டங்களை நிறுத்துகின்ற கட்சியாக எதிர்க்கட்சி உள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

- Advertisement -

மக்களுக்கான திட்டங்களை நிறுத்துகின்ற கட்சியாக எதிர்க்கட்சி உள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கலைஞர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவ சிலைக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அமைச்சர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை ஊர்வலமாக வந்து கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், …

பாசிச சக்திகளுக்கு எங்கும் எதற்கும் பணியாமல் கருப்பு சிவப்பு என்ற கழகத்தின் கொள்கைப்படி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி வெல்ல உறுதிமொழி ஏற்கும் நாளாக இந்த நாள் இருக்கிறது.

இந்தியாவில் அனைவரும் திரும்பி பார்க்கும் மாநிலமாக தமிழகம் வருங்காலத்தில் மாறும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 16 குறைகளை தீர்க்கும் வகையில் உள்ளது. அதனை நிறுத்துவதற்கு முயற்சித்த நபருக்கு நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மக்களுக்கான திட்டங்களை நிறுத்துகின்ற கட்சியாக எதிர்க்கட்சி உள்ளது என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்