மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி!

மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி!

- Advertisement -

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி!

- Advertisement -

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின், ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் தலைமையில், இன்று [ஆகஸ்ட்.6] காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட்.6] நடைபெற்ற,
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனு கொடுக்க வந்த மாவட்ட மக்களிடம் இருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், 25 மனுக்களை பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட இந்த மனு க்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, அவற்றின் மீது விரைவில், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்!” என, இந்த கூட்டத்தில் உறுதியளித்து, மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்