அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

- Advertisement -

அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

 

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார்.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,

பொழுதுபோக்கு என்பது ஒருவர் தனது ஓய்வு நேரத்தில் தொடர்ந்து மகிழ்ச்சிக்காகச் செய்யும் ஒரு செயலாகும். மாணவர்கள் தாங்கள் தொடரும் பாடத்தைத் தவிர வேறு செயல்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. நாம் வாழும் உலகத்தைப் பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும் எந்தவொரு செயலும் ஒரு நல்ல பொழுதுபோக்கு ஆகும் கடந்த காலங்களில் மிகவும் பிரபலமான பொழுது போக்கு தபால் தலை சேகரிப்பு ஆகும். எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் பல்வேறு நினைவுச்சின்னங்கள், தேச தலைவர்கள், தேசிய சாதனைகள் போன்றவற்றின் நினைவார்த்த அஞ்சல் தலைகளை சேகரிப்பார்கள். நாங்கள் நண்பர்களிடமிருந்து தபால் தலைகளைபரிமாறிக்கொள்வோம். பரிமாற்றத்திற்கு அதன் சொந்த தரநிலைகள் உள்ளன, ஏனெனில் சில நேரங்களில் இரண்டு தபால் தலை கொடுத்து ஒரு தபால் தலை பரிமாறிக் கொள்வோம், அஞ்சல் அட்டை , இன்லெண்ட் லெட்டர், என்வலப் கவர்

- Advertisement -

முதல் நாள் அஞ்சல் உறை என சேகரிப்போம். முதல் நாள் வெளியிடப்படும் நினைவார்த்த அஞ்சல் உறையில் அன்றைய நாளில் தலைமை தபால் நிலையத்தில் முத்திரையிட்டு ஆர்வத்துடன் அஞ்சல் உறையினை அனுப்புவோம்.விரும்பத்தக்க முத்திரையைப் பெற்று

பெருமைப்படுவோம், இது அவர்களின் சேகரிப்பில் மற்றொரு மதிப்புமிக்க சேகரிப்பாகும். நாடு வாரியாக மற்றும் கருப்பொருள் வாரியாக சேகரிப்பது ஒரு சுவாரஸ்யமான செயலாகும். கருப்பொருள் தலைப்பில் பறவைகள், விலங்குகள், நினைவுச்சின்னங்கள், தேசத் தலைவர்கள் என பல கருப்பொருள் தொகுப்புகள் உள்ளன. ஒரு தபால் தலை சேகரிப்பாளர் வெளியிடப்பட்ட தபால் தலையின் வரலாறு,முக்கியத்துவம் அல்லது நிகழ்வைப் படித்து, அதன் மூலம் தனது பொது அறிவை மேம்படுத்திக் கொள்கிறார். ‘தபால் தலை சேகரிப்பு’ என்பது ‘பொழுதுபோக்குகளின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது, நவீன காலத்தில் பெரும்பாலான கடிதப் போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அனைவரும் வாட்ஸ்அப், பேஸ்புக், வீடியோ கால் மூலமாக செய்திகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். அஞ்சல் தலை மூலமாக பாரம்பரியம் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளலாம் என்றார்

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள். முன்னதாக

பிஷப் ஹீபர் கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்களான

உதவிப் பேராசிரியர் எல்டின் ரோமெல்லா வரவேற்க கேண்டிஸ் தீப்தி

நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்