நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி

- Advertisement -

நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார்
நீர்ப்பறவைகள் கருப்பொருளில் தபால் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தி பேசுகையில்,நீர் பறவைகள் என்பவை நீர் நிலைகளில் வாழும் பறவைகள் ஆகும். இவை பெரும்பாலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கடல்கள் போன்ற நீர்நிலைகளில் காணப்படுகின்றன.

சில பறவைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை நீரில் கழிக்கின்றன, சில பறவைகள் நீருக்கு அருகில் வாழ்கின்றன. நீர் பறவைகள் பல்வேறு வகையானவை, அவற்றில் சில வாத்துகள், நாரைகள், கொக்குகள், நீர்க்காகங்கள் மற்றும் கடற்பறவைகள் ஆகும்.

- Advertisement -

நீர் பறவைகள் நீந்துவதற்கும், நீரில் மூழ்குவதற்கும் ஏற்றவாறு உடல் அமைப்பு கொண்டவை. அவற்றின் கால்கள் பொதுவாக நீண்டு, வலுவாக இருக்கும், மேலும் அவை விரல்களுக்கு இடையில் சவ்வு கொண்டிருக்கும். இவை நீந்துவதற்கு உதவுகின்றன. அவற்றின் இறகுகள் நீரைத் தாங்கும் வகையில் அமைந்திருக்கும்.

நீர் பறவைகள் மீன்கள், பூச்சிகள், நத்தைகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை உண்கின்றன. சில பறவைகள் நீருக்கு அடியில் வேட்டையாடுகின்றன, சில பறவைகள் நீரின் மேற்பரப்பில் இருந்து உணவைப் பிடிக்கின்றன. நீர் பறவைகள் கூட்டமாக வாழ விரும்புகின்றன. இவை கூடுகளை நீர்நிலைகளுக்கு அருகில் அல்லது நீருக்குள்ளேயே கட்டுகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன.

நீர் பறவைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நீர் நிலைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன, மேலும் இவை உணவுச் சங்கிலியில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளன. நாகரிக காலங்களில் ஈரநிலங்களின் இழப்பு நீர்ப்பறவைகளைப் பாதித்துள்ளது மற்றும் ஈரநிலங்கள் மாசுபட்ட பகுதிகளில் அவற்றின் அழிவுக்கு வழிவகுக்கிறது. நீர் பறவைகள் வாழ்விடங்களில் எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற மனித நடவடிக்கை,
நகரமயமாக்கல் மற்றும் தொழில்களின் எழுச்சி, நீரில் மாசுபாடு மற்றும் கழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதலாக, கட்டுமானத்திற்கான மீட்புத் திட்டங்கள் இந்தப் பறவைகளின் வாழ்விடங்களை காக்க பறவைகள் அழிவிற்கான அச்சுறுத்தலை எடுத்துரைக்கும் வகையில் நீர்ப்பறவைகள் கருப்பொருளில் தபால் தலையினை காட்சிப்படுத்தி விளக்கினார். அதில், தபால்தலை கண்காட்சியின் திட்டம்,
அறிமுகம், காட்சிபடுத்தும் திட்டம்,
வகைப்பாடுகள், குறிப்பு மற்றும் தகவல் ஆதாரங்கள்,உணவு மற்றும் உணவளித்தல்,நன்னீர் பறவைகள்,
கடல் பறவைகள்,கலை மற்றும் அனிமேஷன்கள்,ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில், கார்ட்டூன் கதாபாத்திரங்களாக,புராணங்கள் மற்றும் நம்பிக்கைகள்,
குறியீட்டுவாதம் மற்றும் உருவப்படவியல், இராணுவ சின்னம்/லச்சினை, அரசு கட்டிடங்களின் லச்சினை,கல்வி நிறுவனங்களின் லச்சினை, தபால் தலை கண்காட்சிகளின் லச்சினை,
பாதுகாப்பு, நீர் பறவைகளைக் காப்பாற்றுங்கள், நீர் பறவைகளுக்கு அச்சுறுத்தல்கள்,மிருகக்காட்சி சாலையில் நீர் பறவைகளைக் காப்பாற்றுங்கள் என பல்வேறு தலைப்புகளில் நீர் பறவைகளுக்காக பல்வேறு நாடுகளில் வெளியிட்ட அஞ்சல் தலை சிறப்பு அஞ்சல் உறை ரத்து முத்திரைகள் என பல்வேறு வகைகளில் நீர் பறவைகள் குறித்த கருப்பொருளில் தபால் தலை மற்றும் உறைகளை காட்சிப்படுத்தியிருந்தார்.

முன்னதாக பிஷப் ஹீபர் கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்களான
உதவிப் பேராசிரியர் எல்டின் ரோமெல்லா வரவேற்க கேண்டிஸ் தீப்தி
நன்றி கூறினார்.ஆங்கிலம், வணிகவியல்,கணினி அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல் ,வணிக மேலாண்மை, வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்