பாரா மெடிக்கல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

- Advertisement -

பாரா மெடிக்கல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

 

திருச்சி கி.ஆ. பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பராமெடிக்கல் பயிலக் கூடிய மாணவர்கள் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தியை நினைவு அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற் கொல்கிறார்கள். பயிற்சி மேற்கொள்கிற மாணவர்களுக்கு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் இல்லாமல் உள்ளது இதனால் மாணவர்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருத்துவமனையில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை பயன்படுத்தாமல் பாராமெடிக்கல் மாணவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரவு நேர பயிற்சி வழங்குவதால் அவர்களால் முறையாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை அது மட்டும் இல்லாமல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி பெறும் மருத்துவமனையிலேயே முறையாக வகுப்பறைகள் ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற மாணவர்களுக்கு முறையாக உணவு அருந்தும் இடத்தினை ஏற்படுத்தி அவர்களுக்கென உணவு அருந்தும் நேரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கே மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அன்பு,

கிளை தலைவர் சிவா,

- Advertisement -

கிளை செயலாளர் முத்து குமார்,

துணை தலைவர் வீரசத்திரன்

உறுப்பினர்

மணிகண்டன் மற்றும் பாரா மெ மெடிக்கல் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்