திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் தெற்கு கள்ளிகுளம், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய அலங்கார தேர்ப்பவனி! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு! 

- Advertisement -

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் தெற்கு கள்ளிகுளம், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய அலங்கார தேர்ப்பவனி! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

- Advertisement -

தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தெற்கு கள்ளிகுளம், “பரிசுத்த அதிசய பனிமாதா” பேராலய, 140-வது ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று [ஆகஸ்ட்.4] திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு, “அலங்கார தேர்ப்பவனி” நடைபெற்றது.அதுபற்றிய விவரம் வருமாறு :- தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்திருவிழா, கடந்த மாதம் [ஜூலை] 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன், வெகுவிமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள், இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவின் அனைத்து நாட்களிலும், தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலி, இரவில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் ஆகியன நடைபெற்றன.9-ஆம் திருநாள் நேற்று [ஆகஸ்ட்.4] திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இரவு 7 மணிக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில், சிறப்பு “மாலை ஆராதனை” நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு, அதிசய பனிமாதாவின் “திருஅலங்கார தேர்ப்பவனி” நடைபெற்றது. தேர்ப்பவனியை கோயில் தர்மகர்த்தாவும், நல்லாசிரியருமான எஸ்.மரியராஜ், துவக்கி வைத்தார். நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்த திருத்தேரானது, இன்று [ஆகஸ்ட்.5] அதிகாலை 5 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது.அதன் பின்னர், தூத்துக்குடி மறைமாவட்ட “முன்னாள் ஆயர்” இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியுடன், 10 நாட்கள் நிகழ்ந்த திருவிழா, நிறைவுபெற்றது. தேர்பவனியில், கேரள மாநிலத்தில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். திருவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தாவும், நல்லாசிரியருமான எஸ்.மரியராஜ் தலைமையில், பேராலய “பங்குத்தந்தை” ததேயுஸ் ராஜன் , உதவி பங்குத்தந்தை சி.சாமிநாதன் மற்றும் பங்கு இறைமக்கள், மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்