புதிய வார சந்தை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்ட பணிகளை சமயபுரத்தில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

- Advertisement -

புதிய வார சந்தை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்ட பணிகளை சமயபுரத்தில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் சிறப்பு பேரூராட்சியில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர்

- Advertisement -

மு கருணாநிதி வார சந்தை கட்டிடம் திறப்பு விழா, சிறுகமணி பேரூராட்சியில் 46 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு விழா ச.கண்ணனூர் பகுதியில் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர், சிறுகமணி, தாத்தையங்கார் பேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி, புள்ளம்பாடி மற்றும் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 12.23 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு இலவச பட்டா வழங்கும் விழா நடந்தது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட, பேரூராட்சி சார்ந்த தலைவர்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்