துவாக்குடி திருநெடுங்களநாதர் கோவிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி திருநெடுங்களநாதர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை நடந்தது. இதை முன்னிட்டு மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், கலச அபிஷேகம், ருத்ரா சமகம் பாராயணம், மூல மந்திர ஜபம், தேவார திருவாசகத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.பினர் பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப் பட்டது. பின்பு ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி திருவீதி உலா அடியார் மேளம், நாதஸ்வர தவில் வாத்தியத்துடன் வெளி பிரகாரத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வித்யா முன்னிலையில் கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தரம், ரவி. ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
Comments are closed.