மாணவன் தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் முன்னறிவிப்பில்லா ஆய்வை மேற்கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான வேலூர் மாவட்டம் கொடிய நத்தம் வசந்த நகர் எம்.குப்பம் பகுதியை சார்ந்த யுவராஜ் (17) மரணம் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடினார்.
மாணவர் பயின்று வந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஊக்கமளிக்கும் உரை போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
மேலும் மருத்துவர்கள் வாயிலாக கடந்த 2 மாதங்களில் 4 முறை
மருத்துவ ஆலோசனை வழங்கப்படு வதையும் கேட்டறிந்தார்.
Comments are closed.