திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணி, அமைச்சருக்கு ஆதரவாக  கவுன்சிலர்கள் வெளிநடப்பு

- Advertisement -

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணி, அமைச்சருக்கு ஆதரவாக  கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கைக்கு எதிராக செயல்படுவதாக திருச்சி துணை மேயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 

- Advertisement -

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கினால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என

பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம், அது நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போது அப்பகுதியில் கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து திருச்சி மாநகராட்சி மண்டலம்- 3 இன் தலைவர் மதிவாணன் தலைமையில் துணை மேயர் திவ்யா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். இதனால் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் துணை மேயர் திவ்யாவிடம் பேட்டி கேட்ட பொழுது அவர்கள் பேட்டியளிக்க மறுத்து விட்டனர். மேலும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி தற்போது வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்