தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, வழங்கினார்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் [தாட்கோ] சார்பாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியன, இன்று [ஜூலை.31] வழங்கப்பட்டன. நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற, எளிய நிகழ்ச்சி ஒன்றில், இவை வழங்கப்பட்டன. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் “முனைவர்” திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவற்றை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம், 2007-ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, ஆண்டு தோறும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வழங்கப்பட்டு வருகின்றன!”- என்று, குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் துணைத்தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர், முன்னிலை வகித்தனர். இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார- கிராம ஊராட்சிகளில், தற்காலிகமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 4 ஆயிரம் பேருக்கு மஞ்சள் நிறத்திலான அடையாள அட்டைகளும், ஆயிரத்து 615 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகளும், 551 பேருக்கு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக்காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று [ஜூலை.31] நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் தலைமை செயல் அலுவலர் கோவிந்த ராஜ், உறுப்பினர்கள் மூக்கையா, விஜய் சங்கர்,மாவட்ட தாட்கோ மேலாளர் சுதா, உதவி மேலாளர் சுந்தர ராஜன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பூங்கோதை, உதவி இயக்குநர்கள் பேரூராட்சிகள் வில்லியம் ஜேசுதாஸ், ஊராட்சிகள் முகம்மது ஷபி, நல வாரிய நெல்லை மாவட்ட உறுப்பினர் முனியாண்டி உட்பட, பலர் பங்கேற்றிருந்தனர்.
Comments are closed.