அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்காரருக்கு,15 ஆயிரம் ரூபாய் அபராதம்! கடைக்கு சீல் வைப்பு! – திருநெல்வேலி
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்காரருக்கு,15 ஆயிரம் ரூபாய் அபராதம்! கடைக்கு சீல் வைப்பு! – திருநெல்வேலி
திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, “இத்திகுளம்” கிராமத்தை சேர்ந்த நயினார் என்பவரின் மகன் குசலவன் ( வயது.55). இவர், தன்னுடைய வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து, வியாபாரம் செய்து வருகிறார். இந்த கடையில், திருநெல்வேலி உணவு பாதுகாப்புத்துறை உயர் அலுவலர் மகாராஜன், இன்று [ஜூலை.30] முற்பகலில், திடீர் சோதனை நடத்தினார். அப்போது, அந்த கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடைக்காரருக்கு 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், உணவு பாதுகாப்பு துறையினரால், அந்த கடைக்கு வழங்கப்பட்டிருந்த உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் ஆகியன, தற்காலிகமாக “ரத்து” செய்யப்பட்டன. மேலும், கடையானது 14 நாட்களுக்கு “சீல் வைத்து, அடைக்கப் பட்டது.மானூர் உணவு பாதுகாப்பு துறை உயர் அலுவலர் மகாராஜன் மற்றும் கங்கைகொண்டான் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Comments are closed.