திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகர், சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது.
அப்போது லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவன துணை நிறுவனர் பிரபு குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை இந்நிறுவனம் நெருங்கி விட்டது. 10 ஆண்டுகள் அமெரிக்காவில் இந்நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர் 2007 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெங்களூருவில் தொடங்கப்பட்டது. தற்போது எங்களது நிறுவனத்தில் உலக அளவில் 800 பேர் பணியாற்றுகிறார்கள் இந்தியாவில் 400 பேர் பணியாற்றுகிறார்கள். கொரோனாவின் காரணமாக சற்று பின்னடைவு ஏற்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டுள்ளோம். எங்களுக்கு உலகம் முழுவதும் 14 நாடுகளில் அலுவலகம் உள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 125 பேர் பணியாற்ற கூடிய திறன் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் திருச்சியில் 400 பேர் பணியாற்றக்கூடிய வகையில் திறன் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மட்டும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை 1,200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணைய செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நகருக்கு வெளியே அலுவலகம் அமைக்கும் திட்டமும் உள்ளது. லாஜிக் நிறுவனம் பிரத்யேகமாக பெரிய அளவிலான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு மட்டும் மென்பொருள் தயாரித்துக் கொடுக்கிறோம். திருச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக கடந்த ஆண்டு சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் பணிக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமே தொடங்க வேண்டிய நிறுவனம் சில காலதாமதங்கள் காரணமாக தற்போது திறக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதத்தில் 60 ஊழியர்களுடன் இந்நிறுவனம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.