மாநில அளவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியின் 9 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
மாநில அளவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியின் 9 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டுயெடுப்பதில் இளைஞர்களின் பங்கு என்னும் கருத்தை மையப்படுத்தி கடந்த 08,09,10 ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 26 பல்கலைகழகங்களிலிருந்து 85 கல்லூரிகளை சார்ந்த 232 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனி மற்றும் குழு திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றனர்.
இதில் திருச்சி திருவனைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியை சார்ந்த 9 மாணவர்கள் செல்வன் திவாகர், ஜீவா, ஜனார்த்தனன், கிஷோர், அக்ஷய் ஆனந்த், மதன், கற்பகராஜன், சக்திவேல், கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் ( கபடி, பம்பரம் விடுதல், சாக்கு பை ஓட்டம், கயிரு இழுத்தால், கவட்டை, கிட்டி பிள்ளை, கோக் கோ, பல்லாங்குலி, சதுரங்கம் போன்ற பாரம்பரிய போட்டிகளில்) வெற்றி பெற்று அசத்தியுள்ளனர், இவர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி, மூத்த துணை முதல்வர் முனைவர் ஜோதி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட வழிகாட்டி முனைவர் கிருஷ்ணன், துணை முதல்வர் உபேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களை தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அருண்பிரகாஷ், முத்துக்குமார் மற்றும் பிரசன்னவனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Comments are closed.