திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!
திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பில் உள்ள இரு பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட்டுகள் தயாா் செய்வதற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன், கருணாகரன் ஆகிய இருவரது பேக்கரியில் தயாரிப்பு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள் மற்றும் அந்த முட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 215 கிலோ பேக்கரி உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். தொடா்ந்து, மேற்கண்ட இரு பேக்கரிகளுக்கும் சீல் வைத்தனா். மேலும் இந்த பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Comments are closed.