தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் – ப.குமார் அறிக்கை வெளியீடு
தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் – ப.குமார் அறிக்கை வெளியீடு
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர்,
எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க,
என்னுடைய வாழ்வு மக்களுக்காக
அர்பணிக்கப்பட்ட தவ வாழ்வு… மக்களுக்காக நான்… மக்களுக்காகவே நான்… என்கிற
உயர்ந்த சிந்தனையோடு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து… மறைந்தும்,
மறையாமலும்
நம்மையெல்லாம்
வழிநடத்தும்
கழத்தினை காத்த
தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம்
வருகின்ற 5.12.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 8.05 மணியளவில் நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளிலும்
உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
கழகத்திற்கு உட்டபட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் அம்மா
அவர்களின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .