- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள 683 கிராம் தங்கம் பறிமுதல்!

0

- Advertisement -

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா,இலங்கை, வியட்நாம் தோஹா, உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை பெங்களூர் ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
Vagai
Bismi
நேற்று சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணி சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையில்  பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்தது இதனையடுத்து அந்த பயணியிடமிருந்து ரூபாய் 42 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள 683 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்  எந்த நோக்கத்திற்காக தங்கம் சட்ட விரோதமாக கடத்தி வந்தார்கள்
அவர்களது பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா வேறு வழக்குகள் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா ? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு  தான் வருகிறது.. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் “குருவி” என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்