ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 5,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – அரசின் மானியம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது – தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது பேட்டி!

0

- Advertisement -

தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மாநில தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் மொஷின்சாகிப், ராஜாமுஹம்மது, சம்சுதீன், மாமன்ற உறுப்பினர் பைஸ் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

தொடர்ந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மாநில தலைவர் அப்துல் சமது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

வரும் 26 ஆம் தேதி, முதல் விமானம் ஹஜ்-க்கு புறப்பட உள்ளது. ஜூலை மாதம் 9ம் தேதி வரை விமானங்களில் ஹஜ் பயணிகள் மக்காவை நோக்கி செல்ல உள்ளனர். இவர்களோடு அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களும் ஹஜ் கமிட்டியோடு இணைந்து செயல்பட உள்ளனர். இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5637 பேர் தயாராக உள்ளனர். கணிசமான வகையில் பெண்களும் ஹஜ் செல்ல உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள முன் பதிவு செய்துள்ளனர். அரசின் மானியம் கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துக்கள் சொத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என மோடி பிரச்சாரம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு,,,

தேர்தல் கமிஷன் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்