சமயபுரம் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா
சமயபுரம் பேரூராட்சி சார்பில்
சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் அலுவலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில், யானையின் மேல் பூந்தட்டு உடன் அமர்ந்து ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். இவ்விழாவில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன், செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் சங்கீதா, திருச்சி மாவட்ட பேரூராட்சி செயலர்கள்,கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.