திருச்சியில் 3 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!

0

திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் கலந்து கொண்டு வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினா். மேலும் இவ்விழாவில் மாநகராட்சி மேயா் அன்பழகன், மாநகராட்சி ஆணையா் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், அமைச்சா் கே.என்.நேரு பேசுகையில்….

- Advertisement -

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 110 கோடியில் புதிய கட்டடப் பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களின் குடிநீா் தேவைகளுக்காக 3 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளும், 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடர்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்…

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 33 மாத காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ. 3,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில், 1 லட்சத்து 14 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரை கடன் உதவிகளை தமிழக முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்