திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு விளையாட்டு விழா!
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. கேர் கல்லூரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலர் பிரதீவ் சந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியரும், இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதினைப் பெற்றவரும், இந்திய தெற்கு இரயில்வே விளையாட்டுத் துறையின் உயர் அதிகாரியமான வெங்கடேசன் தேவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து விளையாட்டு துறையின் முக்கியத்துவம் குறித்தும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.