திருச்சியில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள கே.கே.ஆர் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன.
மேல்நடவடிக்கைகாக மூன்று குற்றவாளிகளையும், புகையிலை பொருட்களையும் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த உணவகம் சீல் செய்யபட்டது. மேலும் நாண்கு சட்ட பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.