வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜக சார்பாக கொண்டாட்டம்.

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜக சார்பாக கொண்டாட்டம்..

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக இந்தப் அற்புத பாடலைப் பாடிய வரலாற்றையும், நாட்டுப்பற்று உணர்வை எழுப்பும் முக்கியமான ஆயுதமாக இந்தப் பாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும் வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அளவற்ற உணர்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் தலைமுறைகளை இணைத்து, தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் மக்கள் மனதில் அன்பை விதைத்துவரும் தேசிய உணர்வின் குறியீடு என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும்,140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒருங்கிணைந்த குரலாக ஒலித்து வருகிறது. துன்பங்கள் வந்த தருணங்களில் “‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் நம் அனைவரையும் ஒன்றிணைத்து உற்சாகம் தருகிறது. மேலும் வந்தே மாதரம் பாடலை ஒலிப்பவர்களின் மனதில் சக்திமிகு பாரத மாதாவின் பெருமையை , வலிமையை உணர்த்தி சக்தியை அளிக்கும் சிறப்பு கொண்டது என்று பிரதமர் உணர்ச்சி பொங்க பேசினார்.

வந்தே மாதரம்’ கொண்டாட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் . நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த விழாக்களில் பங்கேற்று, வந்தே மாதரத்தின் பாரம்பரியத்தையும், இந்திய உணர்வையும் உயர்த்த பங்களிக்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மோடி அவர்களின் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் பாஜக மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் கட்சி சேர்ந்தவர்கள் வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே திருச்சி பாஜக சார்பாக வந்தே மாதரம் பாடலை பாடி வெகு உற்சாகமாக கொண்டாடினர். மேலும் வந்தே மாதரம் பாடலை அரசியல், ஜாதி, மதம், இனம் ,மொழிக்கு அப்பாற்பட்டு நமது சுதந்திர இந்தியாவின் பாடலை போற்ற வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுதேசி உறுதிமொழி ஏற்றனர், உறுதிமொழியில்

என் அன்றாட வாழ்வில் இந்திய தயாரிப்பு பொருட்களையே முதன்மையாக பயன்படுத்துவேன், அந்நிய பொருட்களுக்கு மாற்றாக உள்ளூர் பொருட்களை தேர்வு செய்வேன்.

Bismi

வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்களில் இந்திய பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். கிராமங்கள், விவசாயிகள், உள்ளூர் கைவினை கலைஞர்கள் ஆகியோர்களை ஆதரித்து உள்ளூர் தொழில்களை முன்னேற்றுவோம்.

இளைய தலைமுறையினரும் குழந்தைகளும் சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படி நான் அவர்களை ஊக்குவிப்பேன். அடுத்த தலைமுறைக்கு சுதேசி வாழ்வியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பேன்.

எனது குடும்பத்திலும், சமூகத்திலும் எனது தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் மட்டுமே பேசுவேன்.

நான் சுற்றுப்புற சூழல் நளனின் அக்கறை கொண்டவராகவும், சுதேசி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே உபயோகிப்பவராகவும் இருப்பேன்.

நம் நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் இருப்பேன்.

என்ற சுதேசி உறுதி மொழியை ஏற்று அனைவரும் தங்களது கையொப்பமிட்டு மாவட்ட தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் மகளிர் அணிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்