திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் 11-வது தேசிய கைத்தறி தின விழா கண்காட்சி அரங்கினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கைத்தறி துறையின் சார்பில் 11-வது தேசிய கைத்தறி தின விழாவில் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சி அரங்கினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டு நெசவாளர்களுக்கு பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம்
கடனுதவிகளையும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு ரூ.1.86 இலட்சம் கடனுவிகளையும்,
கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களையும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
இக்கண்காட்சியில் கைத்தறி துறையின் சார்பாக திருச்சிராப்பள்ளி சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பருத்தி சேலைகள், வேட்டிகள் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்தின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, மணமேடு தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்
நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கு இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் பொது உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்டோர் இம்முகாமினை பயன்படுத்தி கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மண்டல குழு தலைவர் மதிவாணன், உதவி இயக்குநர் (கைத்தறி துறை) ரவிக்குமார், ஸ்ரீமத் ஆண்டவன்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி, கைத்தறி துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.