ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை சரி செய்யக்கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Communist Party of India protest in Trichy demanding repair of Srirangam East Gateway Tower
ஸ்ரீரங்கம் கோவிலினுடைய கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்து 6 மாதம் ஆகியும் அதனை சரி செய்யாததை கண்டித்தும், உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் சாத்தாரா வீதி பூ மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் பார்வதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.