ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேர்வு நெறியாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முனைவர். சீனிவாச ராகவன் தலைமை உரையாற்றினார்., தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகர் முனைவர் பெருமாள், ஜீ.டி.என். கலைக்கல்லூரி திண்டுக்கல், நூலகர் அரவிந்த் ஐயோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, புத்தகங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பயிற்சியுடன் விளக்கினர், கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி தொடக்க உரையாற்றினார். துணை முதல்வர்கள் முனைவர் மீரா பார்த்த சாரதி மற்றும் முனைவர் சத்ய நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலைப்புல முதன்மையே முனைவர் லட்சுமி வரவேற்பு உரையாற்றினார் நிகழ்ச்சி நிறைவாக முனைவர் பிரபாகரன் நன்றி உரையாற்றினார் நிகழ்விற்கு ஏற்பாட்டினை நூலகம் மற்றும் தகவல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.