தஞ்சையை ஆண்ட மாமன்னர் தஞ்சை பெருவுடையார் கோவில் கண்ட சிவபாத ராஜசேகர தேவர் என்ற ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக கார்த்திக் வைத்திய சாலையில் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது,
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சத்து மருந்துகள்,
சளி மருந்துகள், கபசுர குடிநீர், உணவு பொட்டலங்கள் தலைவர் டாக்டர் கே சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில்
ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார்,
மேலும் ராஜ ராஜ சோழனின் நினைவிடமான கும்பகோணம் அருகில் உள்ள உடையா ஊரில் ராஜ ராஜ சோழனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் டாக்டர் பா.ஜான் ராஜ்குமார்,பேராசிரியர் ரவி சேகர், உறையூர் கார்த்திக், சிந்தாமணி சந்தான கிருஷ்ணன், டாக்டர் சகுந்தலா, டாக்டர் அமீர் பாதுஷா,டாக்டர் விஜய கார்த்திக், டாக்டர் குமார், சுசிலா, ராமு, வனஜா, ஜெனட்,மனோஜ் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்