மழையில் மக்களின் பாதுகாப்புக்கு ஆடியோ வெளியிட்டு அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் பா.ஜான்ராஜ்குமார் பாராட்டு

0

மழையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக ஆடியோ மூலம்
அறிவுரை கூறிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறியதாவது:
மழையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பொதுமக்களில் நலனின் அக்கறையுடன் ஆடியோ வெளியிட்டது பாராட்டுக்குரியது.
திருச்சியில் நேற்று இரவு முதல் கொண்டு கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மின் கம்பி அருந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே சீரார்கள், மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் கவனமாக சாலையை கடக்க வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திறந்தவெளியில் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகளும் பொதுமக்களும் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழை அளவு அதிகமாக இருக்கிற காரணத்தால் பெரும்பாலான நீர்நிலை நிரம்பி உள்ளது.
அதனால் சீரார்களும், மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி பொதுமக்கள் நலனின் அக்கறை உள்ள மனிதநேய மாவட்ட ஆட்சித் தலைவராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பொதுமக்களுக்கு அறிவுரையும் ஆடியோ வெளியிட்டதை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்.
இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்