பொய்யான வழக்கு பதிந்து கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருச்சியில் புகார்…
மதுரையை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ள காளியை என்கவுண்டர் செய்ய போலிசார் திட்டமிட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட அவரது தாய்,சகோதரி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில்
செய்தியாளர்களை சந்தித்தனர், இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வெள்ளை காளி தாயார், ராஜம்மாள் கூறுகையில்,அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கோட்டத் தலைவரும் தற்போது மண்டல செயலாளராக உள்ள திமுகவை சேர்ந்த வி.கே குருசாமி என்பவர் தொடர்ந்து சில உள் நோக்கத்துடன்
காளிமுத்து என்கிற வெள்ளைக்காளி மீதுபொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவருக்காக வாதாட வரும் வழக்கறிஞர்களையும் மிரட்டுவதாகவும் தற்போது இரு வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அந்த வழக்கறிஞர்கள் தங்கள் பையனை என்கவுண்டரில் சுட்டு தள்ள உள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்,
இதனால் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரிஉள்ளதாகவும்தெரிவித்தனர்,
இந்த சந்திப்பின்போது அவர்கள் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் உட்பட உடன் இருந்தனர்.