- Advertisement -

பிரபல சினிமா திரைக்கதை எழுத்தாளர் ஜான்பால் காலமானார், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இரங்கல்

0
Bismi

தேசிய மற்றும் பல சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல சினிமா திரைக்கதை எழுத்தாளர் ஜான்பால் காலமானார், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இரங்கல்.

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 71).
மலையாள பட தயாரிப்பாளரான இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டியின் பல படங்களுக்கு இவர் எழுதிய திரைக்கதை பெரிதும் பேசப்பட்டது.

- Advertisement -

Vagai

ஜான் பால் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதமாக சிகிச்சையில் இருந்த ஜான்பால், நேற்று மதியம் திடீரென மரணம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திரை உலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்