நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
விலை உயர்வால் ஜவுளித் துறை தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் எனவும் கடிதத்தில் கோரியுள்ளார்.