திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 60)இவரது மகன் விக்னேஷ் (வயது 26 ) பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனவிரக்த்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீடடில் யாரும் இல்லாத பொழுது சேலையால் மின்விசிறியில்
தூக்கு போட்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Post