த.வெ.க.வில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனா,நிர்மல் குமார்
– Advertisement – – Advertisement – சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை பொதுச்செயலாளர் கட்சியில் பதவி வழங்கப்பட உள்ளது. நடிகர் விஜய்யின் த.வெ.க.தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சில தினங்களுக்கு முன். விஜயை அவரது பனையூர் அலுவலகத்தில் லாட்டரி […]
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை பொதுச்செயலாளர் கட்சியில் பதவி வழங்கப்பட உள்ளது.
நடிகர் விஜய்யின் த.வெ.க.தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சில தினங்களுக்கு முன். விஜயை அவரது பனையூர் அலுவலகத்தில் லாட்டரி மார்ட்டின் மருமகனும், வி.சி.க முன்னால் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் அவர் த.வெ.க.வில் இணைய இருப்பதாக பேச்சுகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் நடந்த விழாவில். ஆதவ் அர்ஜுனா இணைந்தார். அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட உள்ளது அதேபோல், அ.தி.மு.க.ஐ.டி. பிரிவு இணை செயலாளர் நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார். முன்னதாக ஆட்சியில் சம பங்கு என விஜய் பேசியதை வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த போது ஆதவ் அர்ஜுனா வரவேற்றார். தொடர்ந்து கட்சித்தலைமையின் என்னத்துக்கு மாறாக அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது தி.மு.க.மற்றும் வி.சி.க. இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கட்சியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.