திருச்சி மத்திய மாவட்ட மேற்கு மாநகரம் தில்லை நகர் பகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர், 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகராஜ் தலைமையில் திருச்சி உறையூர் பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், 5 மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், 26 வது வார்டு மாம் என்ற உறுப்பினர் விஜயலட்சுமி.
வட்ட செயலாளர்கள் பவுல்ராஜ், ரவிச்சந்திரன், வாமடம் சுரேஷ், கந்தசாமி, பிரேம்குமார், பகுதி நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், மருதநாயகம், மாணிக்கவாசகம், பாண்டியன், மீனா, புகழேந்திரன், பரமேஸ்வரன் ராஜா, சந்தோஸ்குமார், ரமேஷ், விவேகானந்தன் மற்றும் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.