திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் TGCAN TRUST சார்பாக சோனாலி தலைமையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
கோரிக்கை மனுவில், எங்கள் அமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட திருவாதிகள் உறுப்பினராக உள்ளனர் நாங்கள் சமூக மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.
எங்களுக்கு வாடகை வீடு கொடுக்க எவரும் முன் வருவதில்லை அவ்வாறு வாடகைக்கு வீடு கொடுத்தாலும், வாடகை இரு மடங்காக கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளோம், எனவே ஐயா அவர்கள் எங்களின் சூழ்நிலையை அறிந்து எங்களுக்கு சமயபுரம் அருகில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள இருங்கலூர் பகுதியில் உள்ள வீட்டையோ அல்லது லால்குடி அருகில் உள்ள தச்சங்குருச்சியில் உள்ள பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி ஒளி ஏற்றி எங்களுக்கு வாழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்,
மேலும் இம்மானுவினை மாண்புமிகு கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கொடுத்துள்ளதை தங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என்றும் துறையூரில் அப்பகுதியில் உள்ள 20 திருநங்கைகளுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்கியதை தங்களுக்கு நினைவு கூறுகிறோம் அப்பகுதியில் வாழும் திருநங்கை வாழ்வில் ஒளி ஏற்றிய நீங்கள் எங்கள் வாழ்விலும் ஒளி ஏற்ற வேண்டுகிறோம் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள ஜே ஜே காலனியில் கட்டப்பட்டுள்ள வீட்டையோ எங்கள் அமைப்பில் உள்ள 84 திருநங்கைகளுக்கு வழங்க வேண்டுகிறோம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.