- Advertisement -

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு!

0

- Advertisement -

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஜி. கோவிந்தராஜ் வர்தனன் வரவேற்றார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார். பேராசிரியர் ஈட்டி கணேஷ், கின்னஸ் சாதனையாளர் விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருப்பையா, பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி, மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் பொன். சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Vagai
Bismi

விழாவில் 2021- 23 கல்வியாண்டில் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் மையத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும், நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு
வகுப்பு தொடக்க விழாவும் நடந்தது. முடிவில் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பி.சசி பிரியா நன்றி கூறினார். விழாவில் பாராமெடிக்கல் மாணவ மாணவிகள், ஊழியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்