திருச்சி வரத வேங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் வரத வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வைணவ சாஸ்திரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பு யாக வேள்வி நடத்தி சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து திருக்கல்யாண வைபவம் நடத்தினர்.
இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.