அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு “மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம் வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்” என்ற முழக்கத்துடன் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.