திருச்சி என்டர்டைமென்ட் குரூப் சினிமா மற்றும் கீரைத்தீன் ப்ரொடக்ஷன்ஸ், சோழன் மீடியா விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
பகுருதீன் அலி அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்முருகன், பாலமுருகன், பழனி முருகன் சுபேதின் பாரதி முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் என் பாலகிருஷ்ணன் போலீஸ் பார்வை பத்திரிகை ஆசிரியர் டாக்டர் கே சுப்பையா பாண்டியன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் ஏரோஸ் போட்டோ பால் அசோசியேசன் தலைவர் செந்தில்குமார் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் மற்றும் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் ஜே கே சி ஆரக்கட்டளையின் தலைவர் எஸ் கே டி வினோதினி அறக்கட்டளை நிறுவன தலைவர் எஸ் கே டி பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர் என்கிற வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விருது பெறுபவர்களுக்கு விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சியில் முன் பக்கம் விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்னி அவர்களை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது மேலும் வாத்தி யார் என்ற விழிப்புணர்வு குறும்படத்தை போலீஸ் பார்வை பத்திரிகை ஆசிரியர் என் டாக்டர் பாலகிருஷ்ணன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் கே எஸ் சுப்பையா பாண்டியன் அவர்கள் வெளியிட்டனர்