திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா பள்ளி தலைமை ஆசிரியர் வேத நாராயணன் தலைமையில், காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ சுப்ராம், டாக்டர் சமீர் பாட்சா, ரோட்டரி திருநாவுக்கரசு, ரோட்டரி ராஜா ராம், துளசி பாலசுப்பிரமணியன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
விழாவில் ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ சுப்ராம் கூறுகையில்
சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிப்பறை மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவறை இதை பயன்படுத்துவதற்கு தண்ணீர் தேவையில்லை சிறுநீர் மலம் உரமாக பயன்படுத்தலாம் இதனால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் விவசாயத்திற்கு ரசாயன உரம் இல்லாமல் இதை பயன்படுத்தலாம் திருச்சி மாநகரில் இந்த கழிவறை
ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் முதன்முதலாக கட்டப்படுகிறது இதனால் மற்றவர்கள் தெரிந்து கொண்டு இந்த கழிவறையை அமைத்து பயன்படுத்தினால் தண்ணீரும் நிலமும் மாசுபடுவதை முற்றிலும் தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் விழாவில் நிர்வாக உறுப்பினர் ரங்கராஜன், கோவிந்தன் உடன் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார்.