திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சித்ரா, பொதுச் செயலாளர் முகேஷ் மோகன், பொருளாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா குறித்து மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த் சந்தர் கூறுகையில் திருச்சியில் எங்களின் புதிய மருத்துவ மையம் தில்லைநகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது, இங்கு குறைந்த கட்டணத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையும், எந்தவித கட்டணமும் இல்லாமல் ஐ யூ ஐ சிகிச்சை, 20 சதவீத சலுகையில் ரத்த பரிசோதனை, விந்தணு பரிசோதனை மற்றும் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகிறது மேலும் இங்கு சிகிச்சை பெறுபவர்கள் இஎம்ஐ முறையில் மருத்துவ கட்டணத்தை செலுத்தும் வசதியும் உள்ளது மேலும் இங்கு அதிநவீன மருத்துவ கருவிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர், கடந்த 15 ஆண்டுகளில் எங்கள் மருத்துவமனை மூலம் குழந்தை இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.
குழந்தை இல்லாத தம்பதிகளின் மணக்குரையை போக்கி அவர்களுக்கு முறையான சிகிச்சையை எங்கள் மருத்துவமனை தொடர்ந்து அளித்து வருகிறது என்று தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை எங்கள் மருத்துவமனைக்கு சென்னையில் மூன்று இடங்களிலும் காஞ்சிபுரம் திருவள்ளூர் கோயம்புத்தூர் திருப்பூர் ஓசூர் உள்ளிட்ட 12 இடங்களில் கிளைகள் உள்ளது தற்போது திருச்சியில் எங்கள் மருத்துவமனையில் 13வது கிளை திறக்கப்பட்டுள்ளது இந்த திறப்பு விழாவையொட்டி ரூபாய் 89 ஆயிரம் சலுகை கட்டணத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை அளிக்கப்படும் என்று டாக்டர் அரவிந்த் சந்தர் தெரிவித்தார்.