திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சட்ட தன்னார்வலர் சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சி மாநகரில் பல நிதி நிறுவனங்கள், அடகு கடை போன்று பதிவு செய்துவிட்டு பல மோசடி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர், சில கட்டப்பஞ்சாயத்து நபர்கள், மக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் கெட்ட நோக்கத்தோடு நிறைய நபர்கள், நிறுவனம் என்ற பெயரில் நம்பிக்கையை மக்களிடத்தில் விதைத்து, பணத்தை பெற்றுக்கொண்டு வங்கி காசோலை கொடுத்து பணம் மோசடி செய்து இருக்கிறார்கள், தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இவைகள் அனைத்தும் 138 OF N.I. ACTன் படி மோசடி வழக்கு ஆகும். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது, மோசடி நபர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. எனவே இந்திய தண்டனை சட்டப்படி இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இந்த மோசடி நபர்கள் மீது
நமது ஆணையர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.
சில நபர்கள் தங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை, ஆசை வார்த்தை கூறி ஒரு நிறுவனத்தின் முதலீட்டார்கள் பணத்தை ஈட்டிக்கொண்டு போலியான ஆவணங்களையும், காசோலைகளையும் வழங்கி பொது மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல்
அவரையும் அவர் குடும்பத்தையும் மிரட்டியும் வருகிறார்கள்.
சுயநலம் கொண்ட நபர்கள் மீது உடனடியாக காவல் துறை அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து இவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 420ன்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.