திமுக இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு மாநாடு இருசக்கர வாகன பேரணி!
திமுக இளைஞர் அணியின் சார்பில் இரண்டாவது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த பேரணி நேற்று இரவு திருச்சி பீமநகர் பகுதிக்கு வந்தடைந்தது. இப்பேரணியை திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் ஆகியோர் வரவேற்றனர். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் பத்மபிரியா பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து இந்த இரு சக்கர வாகன பேரணியானது ஒத்தக்கடை, உறையூர், காவேரி பாலம் வழியாக ஸ்ரீரங்கம் சென்றடைந்தது. இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.