திமுகவின் சாதனைகளை கூறி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்போம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

0

திருச்சி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 1,519 பயனாளிகளுக்கு ரூ.937 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். திமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்காக பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம். ஒன்னரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கின்றோம்.

- Advertisement -

ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம்.
திமுக நல்ல நிலையில் இருக்கின்றது. முதலமைச்சர் ஈரோடு இடைத்தேர்தலில் அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி தோழமை கட்சிகளின் மாண்பை காத்திருக்கிறார்.
நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம்தேர்தலுக்கு போறோம்.
நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்