தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
பொதுக்குழு கூட்டம் தலைவர் வக்கீல் அசோகன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை காலங்களில் ஆர்டரின் பேரில், தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பொட்டலமிட்ட உணவு பொருட்களில் பேக்கிங் லைசன்சஸ் கண்டிப்பாக பெறவேண்டும்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்த்தியதால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். ஆகவே தமிழ அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் தலைவர் செல்வராஜ், முன்னாள் பொதுச் செயலாளர் மார்ட்டின், சகுந்தலா ஸ்ரீனிவாசன், புது ராஜா, ரமேஷ் , திருநாவுக்கரசு
உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.