தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் திருச்சி மலைக்கோட்டை மாநகர் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

0

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அனைத்து ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக

அகவிலைப்படி உயர்வு, புதிய சலுகை போன்று சித்தரிப்பதும், காலம் தாழ்த்தி வழங்குவதும், நிலுவைத் தொகையினை மறுப்பதும், குறைந்த மாத ஊதியத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு கடுமையான மனவேதனையும் அதிருத்தியும் ஏற்படுத்தி உள்ளது,

01.01.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் பணியினை ஆறு மாதம் காலம் தாழ்த்தி வழங்கியது ஆறு மாத காலத்திற்கான நிலுவைத் தொகையினை தராமல் மறுப்பது…

- Advertisement -

01.07.2022 க்கான காலம் முதல் வழங்க வேண்டிய அகவிலை பணியினை இது நாள் வரை வழங்காமல் இருப்பது,

முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட சரண் விடுப்பு சலுகைகளை காலவரையின்றி வழங்காமல் ஒத்திவைத்தது,

01.04.2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆணை வெளியிட வேண்டுமென தீர்மானங்களை நிறைவேற்றினர்.

திருச்சி மண்டல தலைவர் ரகுபாலன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் மாநில துணைச் செயலாளர் சங்கர் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாநில பொருளாளர் முருகேசன் செயல் தலைவர் கண்ணன் ஆகியோர் கூட்டத்தில் விளக்க உரையாற்றினர், சட்ட ஆலோசகர் செல்வகுமார் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் மண்டல மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர் நிகழ்ச்சி நேரில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து நன்றி உரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்