தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 02.11.2022 நாள் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு திருச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சென்ன கேசவன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம், சத்தியந்திரன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,
ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அமைச்சுப் பணியில் தற்பொது அதிகரித்துள்ள வேலைப்பளு குறித்து ஆய்வு செய்து கூடுதல் அமைச்சுப் பணியாளர்கள் பெற கடந்த 1982 ஆவது ஆண்டு நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு (study committee) போன்று தற்போது அமைக்கப்பட்டுள்ள நான்காவது காவல் ஆணைய குழுவிடம் (study committee)
அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் அமைச்சு பணியாளர்கள் பெற உரிய கருத்துரு அளிக்கப்படும்.
புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகம் தாம்பரம், ஆவடி மற்றும் செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சுப் பணியிடங்கள் பெற்று வழங்க உரிய கருத்துரு அரசிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் மாநில பிரச்சார செயலாளர் சுந்தர் சிங் மாநில பொருளாளர் சதீஷ் தலைமை நிலைய செயலாளர் ரகுநாதன் சங்க முழக்க ஆசிரியர்கள் பிரகாஷ் சிலம்பரசன் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.